சேலம் மத்திய சிறையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சேலம் மத்திய சிறையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
Update: 2024-06-16 07:16 GMT
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 900-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று சிறையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிறை சூப்பிரண்டு வினோத் தலைமை தாங்கினர். இதில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை கைதிகள் கைகளில் ஏந்தி சென்றனர். பின்னர் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருட்களை கைவிட்டு மீண்டும் குற்றசெயல்களில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதிமொழியை கைதிகள் ஏற்றனர். இந்த ஊர்வலத்தில் சிறை டாக்டர் ரவி, மனயியல் நிபுணர் வைஸ்ணவி, உதவி சிறை அலுவலர் பிரபாகரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் கலந்து கொண்டனர்.