சேலம் மத்திய சிறையில் காவலரை தாக்கிய கைதி

சேலம் மத்திய சிறையில் காவலரை தாக்கிய கைதி குறித்து விசாரணை நடக்கிறது.;

Update: 2024-06-27 04:29 GMT

 சேலம் மத்திய சிறையில் காவலரை தாக்கிய கைதி குறித்து விசாரணை நடக்கிறது.

சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் விஜய் (வயது 22). இவரை பள்ளப்பட்டி போலீசார் வழிப்பறி வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் நேற்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறை போலீசார் ரஞ்சித்குமாரை தாக்கி உள்ளார். இது குறித்து சிறை சூப்பிரண்டு வினோத் கூறியதாவது:-கைதி விஜய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அவ்வப்போது சிறையில் உள்ள மற்ற கைதிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசுவார். இதனால் அவரை காவலர்கள் கவனமாக பார்த்து கொள்வார்கள்.

Advertisement

இந்த நிலையில் சிறை போலீஸ்காரர் ரஞ்சித்குமார் இன்று (நேற்று) தான் அந்த பகுதியில் காவலுக்கு இருந்தார். இதையடுத்து அவர் மதியம் கைதி விஜயை சாப்பிட அழைத்து உள்ளார். அப்போது அவர் குளிக்காமல் இருப்பதை பார்த்த போலீஸ்காரர், கைதியை குளிக்கும் படி கூறி உள்ளார். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜய், போலீஸ்காரர் ரஞ்சித்குமாரை தாக்கி உள்ளார். இதில் போலீசாருக்கு நகக்கீரல் பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ்காரரை தாக்கிய கைதி, விஜய் மீது அஸ்தம்பட்டி போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது. மேலும் கைதி விஜயை அவரது உறவினர்கள் பார்க்க 2 மாதம் அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் புகாரின் பேரில் கைதி விஜயிடம் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News