சேலம் தொங்கும் பூங்கா வாக்குச்சாவடியில் திமுகவினர்- பாமகவினர் மோதல்

சேலம் தொங்கும் பூங்கா வாக்குச்சாவடியில் திமுகவினர் மற்றும் பாமகவினருக்கு இடையே மோதல் உண்டானதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.;

Update: 2024-04-19 14:59 GMT

சேலம் தொங்கும் பூங்கா வாக்குச்சாவடியில் திமுகவினர் மற்றும் பாமகவினருக்கு இடையே மோதல் உண்டானதால், போலீசார் குவிக்கப்பட்டனர். 

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடி அருகே தி.மு.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் திமுகவுக்கு வாக்களிக்குமாறு கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த பா.ம.க. முகவரான கோகுல் என்பவர் இங்கு நின்று ஏன் ஓட்டு கேட்கிறீர்கள் என கூறினார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் கோகுலை தாக்கினர். இதையடுத்து அங்கு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களை இருவரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகுமாறு கூறினர்.

Advertisement

ஆனாலும் பா.ம.க.வினர் தங்களது முகவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனால் பரபரப்பு நிலவியது. பா.ம.க. முகவர் கோகுல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பா.ம.க.வினர் அழைத்து சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் துணை கமிஷனர் பிருந்தா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News