சேலம் : த.மா.கா. சார்பில். ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா

சேலம் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.யின் பிறந்தநாள் விழா நேற்று பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது

Update: 2023-12-29 05:41 GMT

ஜிகே வாசன் பிறந்தநாள் விழா

சேலம் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.யின் பிறந்தநாள் விழா நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட தலைவர் கே.எம்.உலகநம்பி தலைமையில் அம்மாப்பேட்டை வாசவி பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இலக்கிய அணி தலைவர் ஓம்காரா சக்தி முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து மாநகர் தலைமை அலுவலகத்தில் மாநில இணை செயலாளர் சின்னதுரை பொதுமக்களுக்கு அன்னதானமும், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் மாநகர் மாவட்ட செயலாளர் அஸ்தம்பட்டி விஷ்ணுகுமார் ஏற்பாட்டில் சிறப்பு பூஜையும் நடந்தது.

பின்னர் அஸ்தம்பட்டி மண்டல தலைவர் நல்லு சீனிவாசன் ஏற்பாட்டில் சி.எஸ்.ஐ.பாலர் ஞான இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மை பிரிவு மாநில பொதுச்செயலாளர் அப்சல்கான், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு தலைவர் ஆண்டிப்பட்டி செந்தில், இளைஞரணி தலைவர் சாலமன், மகளிரணி தலைவி தனம், மாநகர் பொதுச்செயலாளர்கள் ஈஸ்வரி, சுவேதா, பழனிவேல், மண்டல தலைவர்கள் சூரமங்கலம் நாகராஜ், கொண்டலாம்பட்டி நைனாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News