சேலத்தில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-07 18:23 GMT
சேலத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

சேலம் வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி 13-வது வார்டில் உள்ள அண்ணா தெருவில் சுமார் ரூ.15 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதேபோன்று கன்னங்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு ஏரிக்காடு பகுதியில் ரூ.9 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மேலும் மன்னார்பாளையம் பகுதியில் இருந்து குமாரசாமிப்பட்டி வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் திருமணிமுத்தாற்றில் தூர்வாரும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் தூர்வாருவதன் மூலம் 183 ஏக்கர் வரை நிலம் பாசன வசதி பெறும் என்றார். 14-வது வார்டு சங்கர் நகரில் ரூ.12 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 15-வது வார்டு அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கான்கிரீட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டது.

சேலம் வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ப்பணிகளை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன், பேரூர் செயலாளர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் பூபதி, கவுன்சிலர்கள் ராஜ்குமார், அம்சா பகுதி செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News