சேலம் நாடாளுமன்ற தொகுதி பதற்றமான வாக்கு சாவடிகள் தீவிர கண்காணிப்பு
சேலம் நாடாளுமன்ற தொகுதி பதற்றமான வாக்கு சாவடிகள் தீவிர கண்காணிப்பு. மாவட்ட தேர்வு அலுவலர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு.
Update: 2024-04-15 07:38 GMT
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ள மல்லமூப்பம்பட்டி ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. இதில் சேலம் மாநகர எல்லைக்குள் 82-ம் மாவட்டத்தில் 48-ம் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இதில் சேலம் மாநகர எல்லைக்குள் 89-ம், மாவட்டத்தில் 146-ம் பதற்றமான வாக்குச்சாவடிகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) மூலம் கண்காணிக்கப்படும். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண் பார்வையாளர்கள், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.