சேலம் தெற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா !

சேலம் தெற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஓட்டல் வின்செர் கேஸ்டில் நடந்தது.

Update: 2024-07-05 05:11 GMT

பதவி ஏற்பு விழா

சேலம் தெற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஓட்டல் வின்செர் கேஸ்டில் நடந்தது. புதிய தலைவராக பாலாஜி வீரப்பன், செயலாளராக உமாபதி, பொருளாளராக பிரவீன்குமார் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் மாவட்ட கவர்னர் குரியச்சன், மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் கணேஷ் சங்கர், 6-ம் மண்டல துணை கவர்னர் சிவப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

பதவி ஏற்பு விழாவையொட்டி அழகாபுரம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை, எஸ்.கே.எஸ். மருத்துவமனையில் ரத்ததான முகாம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலர் ஞான இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சேலம் தெற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் காசி பி.பழனியப்பன், செயலாளர் நாகபூஷனம் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News