சேலம் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
சேலம் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் வருகிற 17ந்தேதி முதல் தொடங்குகிறது.
சேலம் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால விளையாட்டு மற்றும் திறமை வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரையும், மாலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரையும் நடக்கிறது.
இறகு பந்து, பூப்பந்து, சதுரங்கம், இசைப்பயிற்சி ஆகியவை தேசிய அளவில் தகுதி பெற்ற பயிற்சியாளர்களால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தலைமைத்துவ பயிற்சிகள், நேரம் மேலாண்மை, ஆளுமை பயிற்சிகள், இலக்கு நிர்ணயித்தல், பொது அறிவு முதலான கூடுதல் பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. மாணவ- மாணவிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், எதிர்காலத்தை திட்டமிடவும் இந்த பயிற்சி முகாம் மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் பிரட்ஸ் ரோடு ஒய்.எம்.சி.ஏ. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று ஒய்.எம்.சி.ஏ. பொதுச்செயலாளர் ஜோஸ் தெரிவித்துள்ளார்.