கடத்தூரில் வெற்றிலை விற்பனை அமோகம்
கடத்தூர் வாரச் சந்தையில் ரூ.5.7 2 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானது.
Update: 2024-05-06 03:49 GMT
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, வெற்றிலை சந்தை நடைபெறுகிறது. இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். மேலும் மணியம்பாடி,கோம்பை, அஸ்தகிரியூர், முத்தனூர், கேத்திரெட்டிப்பட்டி, மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலை 16,000 முதல் அதிகபட்சமாக 26,000 விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் 2000 விலை அதிகரித்தது.இதில் 22க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் விற்பனை நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் 5.72 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.