சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களுக்கு இழப்பீட்டு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-10 02:19 GMT

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

நீடாமங்கலம் பகுதியில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. நீடாமங்கலம் அதங்குடி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. தமிழக அரசும் வேளாண்மை துறையும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை. மேலும் நீடாமங்கலம் அருகே உள்ள புள்ளவராயன்குடிகாடு ,சோனா பேட்டை காளாச்சேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உளுந்து ,பச்சை பயிறு வேர்க்கடலை பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News