சாம்பார் வெங்காயம் விலை வீழ்ச்சி
சங்கராபுரத்தில அதிக அளவில் சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்த நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
Update: 2024-02-03 04:26 GMT
சங்கராபுரத்தில அதிக அளவில் சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்த நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு, பாலப்பட்டு, வடபாலப்பட்டு, கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டைப் போன்று, இந்த ஆண்டும் அதிக விலை போகும் என அதிக பரப்பளவில் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை பணி நடக்கிறது. கடந்த மாதம் வரை கிலோ 60 ரூபாய் வரை விற்ற சாம்பார் வெங்காயம் தற்போது 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.