சாம்பவா்வடகரை அரசுப் பள்ளி ஆண்டு விழா
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;
Update: 2024-02-09 05:09 GMT
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியா் பிரபாவதி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் வைத்தியநாதன் முன்னிலை வகித்தாா். சாம்பவா்வடகரை காவல் உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பொதுத் தோ்வு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். பின்னா், மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சாம்பவா்வடகரை பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி, உறுப்பினா்கள் பழனிக்குமாா், ஐயப்பன், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் சண்முகவேல், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.