குழந்தை வேலப்பர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்க்கா ஸ்டாலின் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-05-01 01:48 GMT

சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நேற்று குடும்பத்தினருடன் வருகை புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளனர், இந்நிலையில் இன்று மாலை வேளையில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பூம்பாறை மலைக்கிராமத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மனைவி துர்க்கா ஸ்டாலின் அங்குள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்,

மேலும் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர், தொடர்ந்து கோவிலையும் சுற்றி பார்த்து கோவிலின் சிறப்பம்சங்களை தெரிந்து கொண்டார்,மேலும் கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர், இதனையடுத்து தங்கும் விடுதிக்கு துர்க்கா ஸ்டாலின் திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News