காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கில் மீண்டும் சம்மன்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த கொலை வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

Update: 2024-05-26 11:55 GMT

ஜெயக்குமார்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த கொலை வழக்கை கடந்த மூன்று நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளதை தொடர்ந்து ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News