பேராவூரணி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது , வாகனங்கள் பறிமுதல்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அரசு அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
மணல் திருட்டில் ஈடுபட்டு கைதானவர்கள்
பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் ராம்குமார், தனிப்படை காவலர் பாலமுருகேசன் மற்றும் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேராவூரணி அருகே நாட்டாணிக்கோட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு மினி வேன்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி வேன்களை ஒட்டி வந்த பேராவூரணியை சேர்ந்த நீலகண்டன் (வயது 29) , பட்டத்தூரணி பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (வயது 21), சாணாகரை பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 30) ஆகிய மூவரையும் பேராவூரணி காவல்துறையினர் கைது செய்து, மணல் ஏற்றி வந்த இரண்டு மினி வேன்களையும் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சிறையில் அடைத்தனர்.