திருக்கோவிலூரில் மணல் கடத்தல் - டிராக்டர் பறிமுதல்
திருக்கோவிலுாரில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.;
Update: 2023-11-06 05:22 GMT
பறிமுதல் செய்யப்பட டிராக்டர்
திருக்கோவிலுார் சப்இன்ஸ்பெக்டர் மதன்மோகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டி.கே.மண்டபம், தென்பெண்ணையாற்றிலிருந்து மணல் மூட்டைகளுடன் வந்த டிராக்டர் பறிமுதல் செய்து மணல் கடத்தி வந்த டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த தணிகாசலம் (52)என்பவரை கைது செய்தனர்.