உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்தல்: 3பேருக்கு வலை
உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 11:43 GMT
காவல் நிலையம்
உளுந்துார்பேட்டை அடுத்த சிவாப்பட்டினம் ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய மாட்டு வண்டி உரிமையாளர்கள் வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து போலீசார், 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய 3 பேரைத் தேடி வருகின்றனர்.