திருமயம் அருகே மணல் கடத்தல் லாரி பறிமுதல்!
திருமயம் அருகே மணல் கடத்தல் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-14 13:07 GMT
பறிமுதல் செய்யப்பட்ட லாரி
திருமயம் அருகே வாளரமாணிக்கம் ரயில்வே கேட் அருகே வாரியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கே.புதுப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்றபோது மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
இதில் பர்மிட் இன்றி மணல்ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரைக்குடி அமராவதிபுதுாரை சேர்ந்த லாரி டிரைவர் தென்னரசு(24) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.