மணல் திருடிய ரவுடி கைது: 20 மூட்டை ஆற்று மணல் பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் திருயடிதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

Update: 2023-12-13 15:02 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேவியர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது பொன்னன்குறிச்சி ஆற்றங்கரை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவா (எ) சிவலிங்கம் (26) என்பதும், அவர் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சிவா (எ) சிவலிங்கத்தை கைது செய்து அவரிடமிருந்த 20 மூட்டை ஆற்று மணலையும்  பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிவா (எ) சிவலிங்கம் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் மணல் திருட்டு, திருட்டு வழக்குகள் உட்பட 10 வழக்குகள் உள்ளது

Tags:    

Similar News