மணல் திருட்டு :தகவல் பதிவிட்ட செய்தியாளரை தாக்கிய 2 போ் கைது

ஸ்ரீரங்கத்தில் மணல் திருட்டைத் தடுக்கக்கோரி சமூக வலைதளத்தில் தகவல் பரப்பிய பத்திரிகையாளரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2024-04-29 06:03 GMT

நரேந்திரன்

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருடுவோா் குறித்து மாவட்ட நிா்வாகம் ட்ரோன் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைத்தளம்  மூலம் வி. நரேந்திரன் (39) என்பவா் தகவல் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த பாஜகவின் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலா் மேலூா் விஜி (எ) மணல் விஜி தலைமையில் 15 போ் கொண்ட கும்பல் நரேந்திரனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த நரேந்திரன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து பாஜக பிரமுகா் விஜி மற்றும் அவருடன் வந்தவா்கள் மீது வழக்குப் பதிந்து, ஸ்ரீரங்கம் மேலூா் செட்டித்தோப்பை சோ்ந்த ஆறுமுகம் (31), விஜயகுமாா் (29) ஆகிய இருவரை ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனா். மற்றவா்களை போலீஸாா் தேடுகின்றனா். நரேந்திரன் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Tags:    

Similar News