குரு பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

சின்னசேலம், தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2024-05-02 03:48 GMT

 சின்னசேலம், தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பூஜையில் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., உதயசூரியன் மற்றும் நகர வணிகர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள குருவிற்கும் குரு பூஜையை கோவில் குருக்கள் பரத்குமார் செய்து வைத்தார். சின்னசேலம் கங்காதீஸ்வரர் சிவன் கோவிலில் குருவிற்கு மகா யாகங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News