கரூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 9வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் புகழஞ்சலி.

கரூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 9வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் புகழஞ்சலி.;

Update: 2025-12-05 10:24 GMT
கரூரில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 9வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் புகழஞ்சலி. அதிமுக கட்சியின் முன்னாள் பொது செயலாளர்,தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் அதிமுக கட்சியினர் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் தமிழக முழுவதும் அதிமுகவினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று கரூர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அவரது திரு உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் முழு திருஉருவ சிலைகளுக்கு மலர்பாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். பின்னர் அவர் செய்த சாதனைகளை போற்றி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கட்சியின் கரூர் மாவட்ட அவை தலைவர் திரு.வி.க. மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் உள்ளிட்ட மாநில மாவட்ட பேரூர் வட்டக் கழக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மறைந்த தங்களது தலைவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

Similar News