திருச்செங்கோடு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அமைதிப்பாரணி 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்செங்கோடு நகர அஇஅதிமுக சார்பில்அமைதி பேரணி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை;
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர்செல்வி ஜெ ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்செங்கோடு நகர அஇஅதிமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி திருச்செங்கோடு நகர அதிமுக செயலாளர் அங்கமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். அமைதி ஊர்வலத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர் மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன்,தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் எம் டி சந்திரசேகர் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல்,வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் வக்கீல் பரணிதரன்,திருச்செங்கோடு நகர துணை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல்,நகர அம்மா பேரவை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன், மாவட்டஅண்ணா தொழிற்சங்க செயலாளர் பழ. ராமலிங்கம்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் சபரி தங்கவேல், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் நகர்மன்ற உறுப்பினர் மல்லிகா, ஆகியோர் உள்ளிட்ட மகளிர் அணி, இளைஞரணி,இளைஞர் இளம்பெண்கள் பாசறை அம்மா பேரவை நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் மாவட்டஒன்றிய நிர்வாகிகள் என இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.நான்கு ரத வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி நகரச் செயலாளர் அங்கமுத்து தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.