நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம்!
ஐயப்பன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் அண்ணாசிலை வழியாக மணிக்கூண்டு, பஸ்நிலையம், கடைவீதி வழியாக சென்று பலப்பட்டறை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது;
நாமக்கல் - மோகனூர் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 60ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. முன்னதாக ஐயப்பன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் அண்ணாசிலை வழியாக மணிக்கூண்டு, பஸ்நிலையம், கடைவீதி வழியாக சென்று பலப்பட்டறை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு பால் குடம் சுமந்து வந்த பெண்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கினர். பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.