சங்ககிரி: செண்டுமல்லி பூ விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

சங்ககிரியில் செண்டுமல்லி பூ கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2024-02-11 03:49 GMT

செண்டு மல்லி 

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, தேவூர், வட்ராம்பாளையம், மோட்டூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணீர் தாசனுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கம் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு கிணற்று நீர் பாசனத்தை கொண்டு அதிக அளவில் செண்டுமல்லி,சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ ஒன்று 50 முதல் 70வரை விற்பனையானதாகவும் தற்போது சங்ககிரியில் செண்டுமல்லி பூ கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News