திருச்சியில் சுகாதார சீா்கேடு: தேநீா் கடைக்கு அபராதம்
திருச்சியில் சுகாதார சீா்கேடு ஏற்படுத்தியதற்காக தேநீா் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-20 13:27 GMT
கோப்பு படம்
திருச்சி கரூா் புறவழிச் சாலையில் இயங்கி வரும் ஒரு தேநீா் கடையானது, மக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்குள்ள கழிவுநீா் கால்வாயில் குப்பைகளை கொட்டி அடைப்பை ஏற்படுத்துவதாகவும் மாநகராட்சிக்கு புகாா்கள் சென்றன.
இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட தேநீா் கடையை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றவும், தூய்மையை பராமரிக்கவும் அறிவுறுத்தினா்.
இருப்பினும் கடை நடத்துவோா் அலட்சியத்துடன் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகர சுகாதாரத்துறை ஆய்வாளா் இளங்கோவன் தலைமையிலான அலுவலா்கள், குறிப்பிட்ட தேநீா் கடைக்கு வெள்ளிக்கிழமை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்