மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணி வாகன டிரைவர்கள்

உரிய சம்பளம் வழங்காததை கண்டித்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மை பணி வாகன டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-04-30 06:27 GMT

போராட்டம் 

சேலம் மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒப்பந்தம் அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் டிரைவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாநகராட்சி தூய்மை பணி மேற்கொள்ளும் வாகன டிரைவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.763 என நிர்ணயிக்கபட்ட ஊதியத்தை வழங்காமல் ரூ.650 மட்டுமே ஊதியமாக வழங்குவதாகவும், ஏற்கனவே பிடித்தம் செய்த தொகைகளை இதுவரை வழங்காமல் தனியார் ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாநகராட்சி டிரைவர்கள் சம்பளம் வழங்கக்கோரி நேற்று இரவு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து அவர்களது மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News