சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷக விழா

கள்ளகுறிச்சி மாவட்டம், அகரக்கோட்டாலத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-24 06:53 GMT

கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், 22, அடி உயரம் கொண்ட மகாவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி விஷ்வக் ஆராதனம், யஜமான சங்கல்பம், ஆச்சார் பவர்ணம், மிருத் சங்கிரஹனம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில் யாகசாலை புண்யாஹவசம், கோபூஜை, அக்னி பூஜை, கும்ப பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 9:30 மணியளவில் கோவில் கலசம் மற்றும் மகாவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமிக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், முன்னாள் சேர்மன் ராஜசேகர் உட்பட பலர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News