மின்சாரம் தாக்கி தற்காலிக பணியாளர் பலி - உறவினர்கள் சாலைமறியல்

விவசாய நிலத்தில் பழுதுநீக்க சென்ற தற்காலிக மின்வாரிய பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானதால் பரபரப்பு;

Update: 2024-02-25 12:52 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக பணியாளர் உயிரிழந்த சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி கோவிந்தன் காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு (32 ). இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் 4 வயது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தேவூர் துணை மின்சார வாரியத்தில் பணிபுரியும் குப்புசாமி என்பவருக்கும் கீழ் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்சார பணியாளர்கள் அனைவரும் விடுமுறை உள்ளனர். இதனிடையே தேவூர் அருகே கணியாளன்பட்டி பகுதியில் விவசாய தோட்டத்திற்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தற்காலிக பணியாளர் தங்கராசு மின்சாரத்தை துண்டித்து விட்டு விவசாய தோட்டத்தில் உள்ள மின் கம்பத்தின் மீது ஏறி பழுதுபார்த்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்தில் தொங்கியபடியே தங்கராசு பரிதாபமாக உயிரிழத்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தும் அதிகாரிகளும் யாரும் வரவில்லை எனவும், மின்சார வாரிய உதவி பொறியாளர் அலட்சியமாக பதில் கூறியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் எடப்பாடி குமாரபாளையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 5மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

இதனைத்தொடர்ந்து தகவலின் பேரி விரைந்து வந்த சங்ககிரி உட்கோட்ட காவல் காவல்துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் தேவூர் போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர் மற்றும் பொதுமக்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

Tags:    

Similar News