ராம்சார் குறியீடு பெற்ற பயிர் நிலத்தில் மரக்கன்றுகள் தீ வைப்பு

ராம்சார் குறியீடு பெற்ற பயிர் நிலத்தில் மரக்கன்றுகள் தீயில் கருகி கிடந்த சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

Update: 2024-03-28 06:02 GMT

மரக்கன்றுகள் தீ 

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்செல்வவிளையில் அமைந்துள்ளது வேம்பனூர் குளம் உள்ளது.  குளத்தின் தெற்கு கரையோரம்  வேம்பனூர் ஏலா உள்ளது. இந்த ஏலாவில் நெல் விவசாயம் மட்டுமே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.       ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளம் ராம் சார் அங்கீகாரம் பெற்ற வேம்பனூர் ஈரநிலம் ஆகும். இங்கு கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்ட தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு வாழும் பறவைகளை வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஈர நிலப்பகுதிமாவட்ட வனத்துறை மற்றும் வேளாண்மை துறை நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது.       இந்த குளத்தின் சாலையோரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏராளமான மரங்கன்றுகள் நடப்பட்டன. இரும்பு வலைகளால் பாதுகாக்கப்பட்ட இந்த மரங்கள் செழித்து வளர்ந்து வந்தன. இந்த நிலையில் நேற்று சாலையோரம் நடப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் கருகி கிடந்த சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. கொளுத்தும் வெயிலுக்கு சாலையோரம் வளர்ந்து நின்ற புற்செடிகள் காய்ந்து கருகாகி நின்றன. இவற்றை யாரோ தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இந்த தீ மள மள வென பரவி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இரு பக்கமும் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளையும் எரித்து விட்டது.   வேம்பனூர் குளம் பகுதி ஆசாரிப்பள்ளம், ராஜாக்கமங்கலம், இரணியல் ஆகிய 3 காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரிகளும் இருந்து விடுவதால் யாரும் இங்கு  ரோந்து பணிக்கு வருவதில்லை. ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் தான் வேம்பனூர் குளம் உள்ளது. எனவே ஆசாரிப்பள்ளம் காவல்துறையினர் அவ்வப்போது இப்பகுதியில் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News