கரூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
கரூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
கரூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நாடு முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினத்தை அனுசரித்து வரும் நிலையில், கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கரூர் சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா மாவட்ட வனத்துறை அலுவலர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வனத்துறை சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அத்தி, நாவல், மகிழம்,ஆவி, மந்தாரை,ஆள் போன்ற பல்வேறு மரங்கள் நடப்பட்டது.
மரம் நடுவிழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுவு செய்தார். உடன் மகளிர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார் (பொறுப்பு), மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு மற்றும் வனத்துறை கரூர் சராகம் ரேஞ்சர் தண்டபாணி, தாதம்பாளையம் ரேஞ்சர் சிவா,வனத்துறை அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர்.