உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
தக்கலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி கருத்தரங்கு மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தக்கலை அரசு மருத்துமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம். குமரி அறிவியல்பேரவை இளம் விஞ்ஞானி திட்டத்தில் 2024-2025 இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சியின் அணி உதவியாளர்கள் திறமையை மேம்படுத்தும் நிகழ்ச்சியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 'நில மறுசீரமைப்பு பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி தாங்கும் திறன்" என்ற உலகளாவிய சிந்தனையில் தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை (பொறுப்பு) கண்காணிப்பாளர் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார். நிகழ்ச்சியில் குமாரகோவில் என்.ஐ.கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் டாக்டர் ஆர்.பி.தன்யா நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன்' தலைமையுரையாற்றினார். சூழலை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜோபிரகாஷ் பேசினார்.