மேலநத்தத்தில் சப்பர பவனி நிகழ்ச்சி
சப்பர பவனி;
Update: 2023-12-28 09:02 GMT
சப்பர பவனி
நெல்லை மாவட்டம் மேலநத்தத்தில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு விழாவையொட்டி இன்று அதிகாலையில் நடராஜருக்கு அபிஷேகம், கோ பூஜை, சோடஷ தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் ஆகியவை நடைபெற்றன.தொடர்ந்து மலர் அலங்காரத்தில் நடராஜர், சிவகாமி ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளிய சப்பர பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.