டவுன் கோவிலில் சரஸ்வதி பூஜை சிற்ப்பு யாகம்
நெல்லை டவுணில் உள்ள சரஸ்வதி அம்பாள் திருக்கோவில் சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-23 13:52 GMT
சரஸ்வதி அம்பாள் திருக்கோவில்
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கோவில்களில் நெல்லை டவுணில் உள்ள சரஸ்வதி அம்பாள் திருக்கோவில் ஒன்று இந்த கோவில் தஞ்சாவூர் கூத்தனூருக்கு அடுத்தபடியாக சரஸ்வதிக்கு என்று தனியாக உள்ள ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதை ஒட்டி நெல்லை டவுணில் உள்ள சரஸ்வதி கோவிலில் இன்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது இதைத் தொடர்ந்து கலைமகள் சரஸ்வதிக்கு பல்வேறு அபிஷேகங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி தென்காசி, விருதுநகர் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.