சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ,விஜயதசமி - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து

கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .

Update: 2023-10-23 04:44 GMT

விஜய் வசந்த் எம்.பி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விஜய்வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சரஸ்வதி தேவியின் அருள் உங்கள் வாழ்க்கையை அறிவாலும், ஞானத்தாலும், செல்வத்தாலும் நிரப்ப இந்நாளில் வாழ்த்துகிறேன். அழிவே இல்லாத கல்வி செல்வத்தை வழங்குகின்ற கலை மகளையும், செல்வங்களை வாரி வழங்கும் திருமகளையும், சரஸ்வதி பூஜை நாளன்று பக்தியுடன் வழிபடுவோம். நம்பிக்கையுடன் கூடிய நமது உழைப்பிற்கு துணை நிற்கும் கருவிகளை கடவுள் முன் படைத்து வழிபடும் ஆயுதபூஜை நாளில் நமது தொழில் சிறக்கவும், முயற்சிகள் வெற்றியடையவும் வேண்டுவோம். தீமைகளை வீழ்த்தி நன்மை வென்ற விஜயதசமி நாளில் சமூகத்தில் தலை தூக்கியுள்ள தீமைகளை அன்பாலும், நல்லுள்ளத்தாலும் வெல்வோம். இந்த பண்டிகை காலத்தில் இறைவன் அருள் நமது அனைவரது இல்லங்களிலும் நிறைவதாக. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள். இவ்வாறு வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News