வடுகப்பட்டி சென்றாயப்பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை...

சங்ககிரி:வடுகப்பட்டி சென்றாயப்பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....

Update: 2024-10-05 15:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வடுகப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி வடுகப்பட்டியில் உள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் சுவாமிக்கு பல்வேறு திவ்ய திரவிய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. இதில் வடுகப்பட்டி சுற்றுவட்ட கிராமப்பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

Similar News