திண்டுக்கல் மண்டு கருப்பண்ணசாமி கோயில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
Dindigul;
திண்டுக்கல், சின்னாளப்பட்டி, அடுத்த பெருமாள்கோவில்பட்டி மண்டு கருப்பண்ணசாமி கோயில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயிலை திறந்து பூஜைகள் செய்யவும் கார்த்திகை தீபம் ஏற்றவும் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்துள்ளது