கரூர் துயரச்சம்பவம். தேசிய பேரிடர் மேலாண்மை உறுப்பினர்கள் கரூரில் ஆய்வு.
கரூர் துயரச்சம்பவம். தேசிய பேரிடர் மேலாண்மை உறுப்பினர்கள் கரூரில் ஆய்வு.;
கரூர் துயரச்சம்பவம். தேசிய பேரிடர் மேலாண்மை உறுப்பினர்கள் கரூரில் ஆய்வு. கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள், பிரேத பரிசோதனை செய்தமருத்துவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரு வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாகஇன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அனுஜ் தைவான் தமையிலான உறுப்பினர்கள் கரூர் வருகை தந்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் சிபிஐ அதிகாரிகளுடன் சேர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் துயர சம்பவம் நடந்த இடமான வேலுச்சாமிபுரம் பகுதியிலும். முன்னதாக தமிழக வெற்றி கழகத்தினர் பிரச்சாரம் நடத்த கோரிக்கை வைத்த,பேருந்து நிலையம் ரவுண்டானா, லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை,ஆசாத் ரோடு,80 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து செய்தனர்.