ஆண்டிபட்டி அருகே தங்கம்மாள்புரத்தில் இந்து முன்னணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
புதிய கிளை நிர்வாகிகள் குறித்தும் உறுப்பினர்களை அதிகப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்திக்கு உட்பட்ட தங்கம்மாள் புரத்தில் இந்து முன்னணி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .இந்து முன்னணியின் வடக்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தங்கம்மாள்புரம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் இரண்டாவது கிளை கமிட்டி அமைத்து புதிய உறுப்பினர்களை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட ஒன்றிய கிளை இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்