முகமூடி கொள்ளையர்களை பிடித்த காவலர்களுக்கு பாராட்டிய காவல் துணை தலைவர் சரவண சுந்தர் 

காங்கேயத்தில் கடந்த மாதம் 2ம் தேதி அதிகாலையில் 7 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றது. இதில் ஈடுபட்ட முகமுடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியிருந்தது. கொள்ளையர்களை விரைவில் பிடித்த காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த காவல்துறை தலைவர் சரவணா சுந்தர்

Update: 2024-10-05 17:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகர் மற்றும் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 02ம் தேதி  அமாவாசை அன்று அதிகாலை நேரத்தை பயன்படுத்தி 7 வீடுகளில் பூட்டை உடைத்து பணம் பல லட்சம் மற்றும் நகை சுமார் 30 பவுன் கொள்ளை நடைபெற்றது.அந்த கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் கொள்ளையர்கள் கையில் கடப்பாரை,தடிகள் போன்ற ஆயுதங்களுடன் சர்வசாதாரணமாக கொள்ளையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.மேலும் இதற்க்கு முன்னதாக உடுமலைப்பேட்டை,தாராபுரம் ஆகிய பகுதிகளில் இதே பணியில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருந்தது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையில் 2 டிஎஸ்பிக்கள் , 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதலுக்கு பின் 20ம் தேதி குற்றவாளிகள் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன்,ராஜா, சுரேஷ், தங்கராஜ் ஆகிய 4 நபர்களை சட்டிஸ்கரில் கைது செய்து அவர்களிடம் இருந்து 32 சவரன் நகை குற்றத்திற்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் ஒரு ஸ்கர்ப்பியோ ஜீப் பறிமுதல் செய்தனர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்த கொள்ளையர்களை பிடித்த காவல் துறையினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் பொதுமக்கள் பாராட்டி வந்த வேளையில் கோவை மண்டல காவல் துணை தலைவர் சரவணா சுந்தர் தனிப்படையில் செயல்பட்ட காவலர்களை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். இதில் வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் இந்த தனிப்படையில் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News