எடப்பாடி அருகே புடவைகள் பறிமுதல்
எடப்பாடி அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Update: 2024-04-06 00:45 GMT
எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள புடவையை நிலை கண்காணிப்பு குழு பறிமுதல் செய்து வட்டாச்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு என மொத்தம் 21 தேர்தல் கண்காணிப்பு குழு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே மூலப்பாதை பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ரவி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக இளம்பிள்ளையில் இருந்து மேச்சேரிக்கு கொண்டு சென்ற சொகுசு காரில் 70,000 மதிப்புள்ள புடவை சரியான ஆவணமின்றி இருந்ததால் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் உடனடியாக புடவைகளை அனைத்தையும் பறிமுதல் செய்து எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.