மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து சசிகலா ஆறுதல்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார்.

Update: 2024-06-21 05:22 GMT

சசிகலா 

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். அவர் கூறியதாவது; விஷ சாராயம் குடித்து 38 பேர் இறந்துள்ளனர். 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இதற்கெல்லாம் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் காவல் துறை அமைச்சராக இருப்பதால் அவர் தான் அதிக பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிட்ட கூட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை செய்து கொண்டு இருக்கின்றனர். அதற்கு காவல் துறை துணையாக உள்ளது. சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

இது போன்ற குற்றங்களில் ஈடுப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்காக அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வதால், எதுவும் மாறிவிடப்போவதில்லை. சஸ்பெண்ட் செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை ஒரு வாரத்திற்குள் கைது செய்யவேண்டும்.

அரசு நடவடிக்கை எடுக்காவிடில் மக்கள் உங்களுக்கு சரியான நேரத்தில் பாடம் புகட்டுவர். அரசுக்கு தெரியாமல் இது நடந்ததாக தெரியவில்லை. இதுபோன்று, தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சசிகலா கூறினார்.

Tags:    

Similar News