வேட்பு மனு தாக்கல் செய்த சசிகாந்த் செந்தில்

திருவள்ளூர் மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த கேடர் ஐ.ஏ.எஸ்;

Update: 2024-03-27 11:26 GMT

வேட்பு மனு தாக்கல்

கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வெற்றி சிங்கமாக களமிறங்கியுள்ள சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் சார்பாக தமிழ்நாட்டில் திருவள்ளூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் .முன்னதாக மாற்றத்தை நோக்கிய இந்த பயணத்தின் துவக்க நிகழ்வில் மக்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கின்றேன்! என வீடியோ ஒன்றை பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்தார் .

இதனை அடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான மார்ச் 27 ந்தேதியான இன்று திருவள்ளூர் மக்களவை தொகுதியில்காங்கிரஸ் வேட்பாளரக அறிவிக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் இன்று காலை 10:00 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், திருவள்ளூர் மக்களின் ஆசியுடன் வேட்பு மனுவைதாக்கல் செய்தார் .

Advertisement

அப்போது திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு V. G.ராஜேந்திரன், ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆவடி. நாசர், மாதவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. சுதர்சனம்,கும்மிடிப் பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் T.J.கோவிந்தராஜன்,பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. கிருஷ்ணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக நடைபெற்ற பேரணியில் கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக உற்சாகப் பெருக்கோடு பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News