மின் கம்பத்தில் லாரி மோதி விபத்து - 7 பேர் படுகாயம்

சத்தியமங்கலம் அருகே குச்சி கிழங்கு லோடு ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2024-04-11 12:23 GMT

சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கிரன் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் இருந்து குச்சி கிழங்குகளோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் மாவட்டம் மல்லூருக்கு சென்றது.  லாரியை சேலம் மாவட்டம் ஆத்தூர் கருமந்துறை கலக்கம்பாடி பகுதியில் சேர்ந்த டிரைவர் மூர்த்தி வயது 33 ஓட்டி வந்துள்ளார். லாரி சத்திய ரோட்டில் அத்தியப்ப கவுண்டன் புதூர் பிரிவு அருகே வரும்பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மின்கம்பம் நுழைந்தது லாரியில் இருந்த குச்சி கிழங்கு சிதறியது. இதில் லாரியின் பயணம் செய்த ஏழு பேரும் சிறுக்காயுடன் இழுத்த பின்னர் காயம் அடைந்தவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News