சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு
Update: 2023-12-12 06:56 GMT
மனு அளிக்க வந்தவர்கள்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அதில், ஈமச்சடங்கு நிதி 25 ஆயிரம், மருத்துவ காப்பீடு பலன்களை உடனடியாக வழங்குதல், மாதாந்திர சிறப்பு பென்ஷன் உயர்வு வழங்குதல், அகவிலைப்படி வழங்குதல் ஆகியவை குறித்து, நிதி துறையுடன் கலந்து பேசி பட்ஜெட்டில் அறிவிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேண்டுகோள் வைப்பதாக குறிப்பிடப்பட்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.