சாத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள சடையம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் முதல் நிகழ்ச்சியாக கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் பல்வேறு இடங்களில் புண்ணிய தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் விநாயகர் பூஜை புண்ணியவகாசனம் மகாகணபதி ஹோமம் ஆகியன நடைபெற்றது.
அதேபோன்று மாலையில் ஸ்ரீ மகா கணபதி பூஜை எஜமான வர்ணம் ஆச்சரிய வர்ணம் புண்ணியா மகா வாசனம் வாஸ்து சந்தி பிரவேச பலி திக்பலி யாகசாலை பிரவேசம் காசு தாவணம் சுமங்கலி பூஜை தம்பதி பூஜை கடைசி ஸ்தாபனம் வேதிகா அர்ச்சனை ஹோமம் வேத பாராயணம் பூர்ணாகுதி தீப ஆராதனை பிரசாதம் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தனம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை 4 மணி அளவில் ஸ்ரீ விநாயகர் பூஜை, கோ பூஜை, புண்ணியா வாசனம் , வேதிகா அர்ச்சனை , பாராயணம் ஹோமம் அமைந்தனர்.
ஹோமம், பூர்ணாகுதி, யாத்ரா , தானம் ஆகியவை நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து சகல மங்கள வாத்தியங்களுடன் புறப்பட்டு ஸ்ரீ காளியம்மன் கோவில் விமானம் காளியம்மன் வைரவர் கருப்பசாமி மூலமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பால் பன்னீர் சந்தனம் இளநீர் குங்குமம் உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களால் அம்மன் விநாயகர், மற்றும் வைரவர் சாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
கும்பாபிஷேகம் செய்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக காரியத்தை சத்குரு ஸ்ரீ ராகவேந்தர் தாசன் ஸ்ரீ ராகவன் சுவாமி குழுவினர் செய்து வைத்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.