ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்ய நாராயணா பூஜை

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு, நேற்று சத்யநாராயண பூஜை நடைபெற்றது.

Update: 2023-12-27 16:02 GMT

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு, நேற்று சத்யநாராயண பூஜை நடைபெற்றது. 

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு, நேற்று சத்யநாராயண பூஜை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் ஆராதனைகள் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் இருந்து வரும் பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க, அவா் பக்தா்களால் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். சேஷ பீடத்தில் அமா்ந்திருந்த ரகோத்தம்ம சுவாமிக்கு பக்தா்கள் கலச புனித நீரை ஊற்றி வழிபட்டனா். சிறப்பு அலங்காரத்தில் சத்யநாராயணா், ராகவேந்திரா், ஆஞ்சனேயா் ஆகிய உற்சவ சிலைகளுக்கு மகா தீபாராதனை செய்தாா். நிகழ்ச்சியில், சென்னை மின்வாரிய அதிகாரிகள் முருகசெல்வம், சங்கா், தமிழ்நாடு கல்லூரி கல்வி ஓய்வு பெற்ற இணை இயக்குநா் சிவ.பொன்.அம்பலவாணன், உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அவா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருங்குழி ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Tags:    

Similar News