தண்ணீர் திறந்தவர் மீது வழக்கு பதிவு - போராட்டத்தில் இறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அடைக்காகுழி ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்

Update: 2023-12-08 06:39 GMT
மார்க்சிஸ்ட் போராட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் அடைக்காகுழி ஊராட்சிக்குட்பட்ட அட்டகுளம் என்ற குளத்தில் தண்ணீரை தனி நபர் ஒருவர் திறந்துவிட்டதாக கொல்லங்கோடு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இதை கண்டித்து அடைக்கா குழி ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்தியாக்கிரக  போராட்டம் நேற்று  நடத்தப்பட்டது.      போராட்டத்திற்கு கட்சியின் வட்டார செயலாளரும்,  முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான ரெஜி தலைமை தாங்கினார். ஊராட்சி உறுப்பினர்கள் வினிஷ்குமார், ஆமோஸ், ஹெப்சி மேரி, பிரேமா, சித்தரலேகா முன்னிலை வைத்தனர் .

மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட உறுப்பினர் மேரி ஸ்டெல்லா பாய், வட்டாரக்குழு உறுப்பினர் சுனில்குமார், ஒன்றிய கவுன்சிலர் பத்மகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் செல்லசாமி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

Tags:    

Similar News