சவரத் தொழிலாளர்கள் மனு
திருச்செங்கோட்டில் புதிதாக துவக்கப்பட்டுள்ள சலூன் கடையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட குறைவாக வசூலிப்பதாகக்கூறி சவரத் தொழிலாளர் மனு அளித்தனர்.
திருச்செங்கோட்டில் சங்ககிரி ரோட்டில் புதிதாக தொடங்கப் பட்டுள்ள முடிதிருத்தும் நிலையம் சங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு குறைவாக முடிதிருத்தம் செய்வதாக விளம்பரம் செய்வதால் நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாகவும் .
இதனால் அந்த விளம்பரங்களை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் நகர காவல் நிலையம் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி கே ராஜா திருச்செங்கோடு நகர தலைவர் முருகேசன் நகர செயலாளர் குமரேசன் நகர் இளைஞர் அணி தலைவர் செல்வகுமார் செயலாளர் சக்திவேல் பொருளாளர் பெரியசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி கே ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது திருச்செங்கோடு நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன இதனை நம்பி சுமார் 300க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்
இந்த நிலையில் சங்ககிரி ரோட்டில் கட்ஸ் அண்ட் கோ என்கிற பெயரில் ஒரு பார்லர் கடந்த 10-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளாமல் எங்களது தொழிலை செய்ய வரும் இவர்கள் கட்டிங் மட்டும் ஷேவிங் செய்ய சங்கம் நிர்ணயித்துள்ள தொகையை விட 50 ரூபாய் குறைத்து வாங்குவதாக விளம்பரங்கள் செய்துள்ளனர் இதனால் எங்களது தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் அந்த விளம்பரங்களை நகரிலிருந்து அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர காவல் துறையினரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறு தொழில் செய்து பிழைத்து வரும் எங்களைப் போன்ற சவரத் தொழிலாளர்கள் வாழ்வை சிதைக்காமல் பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறினார்.