குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் மோசடி

Update: 2023-12-20 10:58 GMT
 மோசடி
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரியா(23). இவருடைய செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்ட நபர், பகுதிநேர வேலையாக, தான் அனுப்பும் புகைப்படத்தை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்று கூறினார். அதன்படி பிரியா செய்து ரூ.100-ஐ பெற்றார். பின்னர் டெலிகிராம் ஐடியில் இருந்து பிரியாவை தொடர்புகொண்ட நபர், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார், இதை நம்பிய பிரியா, ரூ.1,000-ஐ செலுத்தி ரூ.1,300-ஆக திரும்பப் பெற்றார். பின்னர் அவர், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்தை அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கியின் கணக்கிற்கு 8 தவணையாக அனுப்பி வைத்தார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் பிரியாவுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்த நபர் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News